ரேகை

போதும் நம் எதிர்காலத்தை
கணித்து என் கைரேகை
தேய்ந்துவிட்டது
கொஞ்சம் என்
இதழ்ரேகையை தேயச் செய்.........  

தாவணி

பேருந்தில் எனக்கு
பின்னால்
அமர்ந்து வீசிய
காற்றில் பறந்த என்
தாவணியில்
முகம் பதித்தவனே
இன்றெல்லாம்
அந்த தாவணி தான்
எனக்கு  தலையனை...........

நிழல்

நிழலில் கிடைக்கும்
நிம்மதி 
என் நிழல் கூட 
தேடும் 
அவள் (தாய்) சன்னிதி

காதலர் தினம்

காதலர் தினம் கொண்டாடுகிறேன்
அவள் எனக்கு
அனுப்பிய வாழ்த்து 
அட்டைகளுடன்....................


மீண்டும் 07 /09

யார் அவள்.............

கோடிக்கணக்கான
என் ஆசைகலை
பட்டாம்பூச்சி
வண்ணங்களை போல்
என் நெங்சில்
சேமிடத்துள்ளேன்.....
யார் அவள்........
என் இதயம்
துடிப்பதே அவள்
வருகைக்காகத் தான்.........