சண்டை

எனக்கும் என் படுக்கையறை
தலையணைக்கும்
சண்டை!
இப்போதெல்லாம் அதை
கட்டிப்பிடித்து உறங்க
மறுத்துவிடுகிறேன்....................

உனக்கான இடம்

மாரடைப்பு வருவதற்கான
அறிகுறி
என் இதயத்தியில்
வெற்றிடத்தை நிறப்ப
உதிரமும் மறுக்கிறது.........
இது உனக்கான இடம்

அழகன்

நானும் உனக்கு
ஏற்றவன்
தான்....
என் கவிதையை
உன் மார்போடு
கட்டியனைத்து
தூங்கிய போது.........

எப்போதும் என்னுடன்

பிஞ்சு வயசுல என்
நெஞ்சுல
ஆலமரமா வளந்தவ!

அறியா வயசுல
ஊரரிய முத்தம்
கொடுத்தவ!

அப்பன் மாருமேல
வளந்து என்
நெஞ்சோடு வளந்தவ!

இப்போ அறுவது
வயசு.................
இன்னும்
கூடவே வறாயா
சுடுகாட்டுக்கு!

தாய்மை இவள்

குறும்புக் கார பெண் இவள்
ஓவியத்தின் அழகு இவள்
இரவிற்கு வெளிச்சம் இவள்
பூக்களுக்கு முத்தம்
கொடுத்தவள்
புன்னகைக்கு அர்த்தம்
சொன்னவள்

பாலைவன பூக்கலைப் போல்
எப்போதும் தனித்திருப்பவள்..
ஆழ்கடலின் ஆழத்தை
தொட்டவள்
கோபத்தின் கொந்தளிப்பில்
சூரியனை சுட்டவள்.

அழகை காட்டிக் கொடுத்தவள்
பொறாமையை கிள்ளி விட்டவள்
புன்னகையை சிந்தவிட்டு
பல இதயங்களை
கட்டிப்போட்டவள்....

கண்ணாடியின் பிம்பம் இவள்!
ஒட்டாத பாதரசம் இவள்!

கண்ணகிக்கு சொந்தக்காரி
வேசத்திற்கு மோசக்காரி
கற்பனைக்கு கூலிக்காரி

அன்பிற்குரியவள்
காதலுக்கு இலக்கணம் கொடுத்தவள்
நட்பிற்கு வடிவம் கொடுத்தவள்
மொத்தத்தில்
பெண்மைக்கு தாய்மை இவள்!

இலக்கணம்


உன் நட்பிற்கு இலக்கணம்
யார் என்று
கேட்டார்கள்
அன்று பள்ளியில் அவள்
இன்று கல்லுரியில் நீ

இயற்கை

பன்மடங்கு பெறுகிவிட்ட
மட்கள்தொகையில்
எல்லோரும்
எப்படியாவது
எதற்காவது
இயற்கையை நேசித்துவிடுகிறோம்!

மழை,மலை,பூ
புறா,காற்று,காத்தாடி
இப்படி
ஏதேனும் ஒன்றை......

இயற்கையின் அத்துமீறல்
இந்த பூமி!
மனிதக் கோட்பாடை
தாண்டாமல்
தன்னடக்கமாய் நம்
இதயத்தை தொட்டுச்
செல்லும் இயற்கை!

ஆழ்கடலை தொட்டுவிட்டோம்
ஆகாயத்தை நெருங்கிவிட்டோம்
ஆனால்
இயற்கையின் அந்தரங்கம்
மட்டும்
புலப்படவில்லை!

பூவை நேசிக்கும் மங்கை
உண்டு
நிலவை நேசிக்கும் ஆண்களும்
உண்டு
இயற்கை கற்றுக்கொடுத்த
காதலை
நேசிக்காதவன் எவன்?

எச்சரிக்கை!
இயற்கை அழகானது
மட்டுமல்ல
இதயத்தின் ஆழத்தை
தொட்டு நம்
புத்தியை பேதலிக்க
வைத்துவிடும்...

ஓயாது இயற்கையின் அட்டகாசம்.........
அழகானது இயற்கையின் சவகாசம்.......

அன்புள்ள....................?

காற்றோடு காற்றாய்
கலந்தவளே!
என் உயிரோடு உயிராய்
புதைந்தவளே!
உன் கைரேகை பட்ட
இடமேல்லாம்
என் இதழ்ரேகையை
பதிக்கிறேன்.

பட்டாம்பூச்சி கூட்டுக்குள்ளே
குடித்தனம் புகுந்தாய்!
முத்தங்களை பெற்றுக்கொண்டு
இதழ்கள் சிவந்தாய்!
இடம்மாறி துடிக்கும்
இதயம் கூட உன்னை கண்டவுடன்
இடைவெளி விட்டு
துடிக்கின்றது.

குட்டி குட்டியாய் கோடி
ஆசைகள்
என் இதயம் போதவில்லை
பார்வை பட்ட
இடமேல்லாம் தேடிக்கொண்டு
இருக்கிறேன் எனக்கான
இதயத்தை!

அழகு


எப்போதும்
மௌனமாகவே இருக்கிறாய்
அதனால் தான்
என்னவோ
என் கவிதை
அழகாய் இருக்கிறது.

ரோஜா

என் அழகை ரசித்தவர்கள்
பலபேர்
என்னை தொட்டுப்பார்த்தவர்கள்
சிலபேர்
நீயொருவள் தான்
என் இதழொடு இதழ்பதித்து
முத்தமிட்டாய்
இந்த ரோஜாவிற்கு
முத்தமிட்ட முதல் ரசிகை
நீ........

               -சுதாகர் ராமகிருஷ்ணன்

காதல்

காதல் உனக்கும்
எனக்கும்
தெரிந்த ஒன்று.............
பிறந்தநாளை மறந்தவன்
எல்லாம் காதலர்தினம்
கொண்டாடுகிறான்
நேசத்தின் அறைகூவளாய்.......

காதல்
ஒரு தனி உலகத்தின் வாசற்படி!
அழகை ரசிக்கத் தோன்றும்,
தனிமையில் சிரிக்கத் தோன்றும்,
விழித்துக்கொண்டே கனவு காணத்
தோன்றும்,
தூக்கத்தில் பேச வைக்கும்,
தூங்கமல் யோசிக்க வைக்கும்,
ஏன்!
சில சமயம் இதயம் கூட
இடம் மாறுவதுண்டு...

எல்லோரும் கொஞ்சம்
எழுந்து நில்லுங்கள்
உங்களுக்கு ஒரு காதல்
கீதம் சொல்லித்தருகிறேன்...
உங்களுக்கு சொந்தமானவர்க்ளின்
இதயத்துடிப்பை கேளுங்கள்,
உங்களுக்காக துடிக்கும்
துடிப்பை கேளுங்கள்,
அது உங்கள் அழகான ஆழமான
காதலை கீதமாக
சொல்லும்
இதை விட ஒரு காதல் கீதத்தை
எங்கே கேட்டுவிட முடியும்....

கடைசியாக
வாழ்த்துகிறேன் காதலின்
முடிவால் மனமேடையை
கண்ட ஜோடிகளுக்கும்,
கல்லறையை கண்ட
காதலர்களுக்கும்
என் வாழ்த்துக்கள்....