பயணம்


கொடியில் பூத்த
மல்லிகையை விட
உன் கூந்தலில் குடியேறிய
மல்லிகையின்
வாசம் பட்டு என்
பயணம் தடைபட்டது...

தொடங்கிவிட்டேன்
மறுபடியும்!
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த மல்லிகையின்
வாசனையுடன்....

ஆறுதல்

அழகாய் சிரித்துவிட்டாய்
மெதுவாய் பார்த்துவிட்டேன்
படபடக்கும் என் இதயத்திற்கு
ஆறுதலாய் சில
முத்தங்கள்!


அரங்கேற்றம்



உன் வெட்கத்திலும்
என் சினுங்கலிலும்
அரங்கேற்றப்பட்டது
நம் முதல் முத்தம்!

பிடித்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இயற்கை பிடித்திருக்கிறது
அதில் செயற்கை பிடிக்கவில்லை!
நிலவு பிடித்திருக்கிறது
அதன் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவில்லை!
நட்சத்திரம் பிடித்திருக்கிறது
அதன் தூறம் பிடிக்கவில்லை!
மழை பிடித்திருக்கிறது
அதில் நனைய பிடிக்கவில்லை!
காதல் பிடித்திருக்கிறது
அதன் லீலை பிடிக்கவில்லை!
நட்பு பிடித்திருக்கிறது
அதன் தெளரகம் பிடிக்கவில்லை!

தனிமை பிடித்திருக்கிறது!
அதில் கனவு பிடித்திருக்கிறது!
கனவில் கற்பனை பிடித்திருக்கிறது
அதில் காதல் பிடித்திருக்கிறது!
காதலில் என்னை பிடித்திருக்கிறது!!!!!!

நவயுக தேவிகள்



இது தேவிகள் நடத்தும்
புரட்சி
எனக்கு சம்பந்தமில்லை

அடைபட்டு கிடந்தவள்
விடுதலை
பெற்றுவிட்டாள்

மர்மமான முறையில்
ஒர் புரட்சி!

வீணையை ஏந்தியவல்
இன்று ஆயுதம் ஏந்துகிறள்!
தாமரையி அமர்ந்தவள்
இன்று விண்வெளியில்
பறக்கிறாள்!
பொற்காசுகலை கொடுத்தவள்
இன்று ரூபாய் நோட்டுகலில்
புரலுகிறாள்!

என்ன ஒரு வறுத்தம்
இத் தேவிகள்
இன்னும் ஊமைகளாகவே
நடமாடுகின்றனர்.



காதல் பொண்ணு


காதலுக்கு கண்ணில்லனு
கேள்விபட்டேன்
அது
நா காதலிச்ச பொண்ணு
தானு தெரிஞ்சுகிட்டேன்...

அழகில்லாத பொறப்புனு
வருத்தப்பட்டேன்
அவ அழகோட என்ன
அல்ல ஆசபட்டேன்!