புன்னகை


உயிரை கையில்
ஏந்துகிறாய்
என் வாழ்க்கையில்
ஒளியாய் வீசுகிறாய்

உன் புன்னகை ஒன்றே
போதுமடி
என் வாழ்க்கையில்
நீ தான் எல்லையடி...

காலம் முழுக்க
காத்திருப்பேன் என்
காதலிலே நீ
பூத்துவிட்டாய்..

பட்டாம்பூச்சி பார்த்திட
வேண்டும்
உன் புன்னகை கண்டு
ஓடிட வேண்டும்

உன் கையை பிடித்து
வாழ்ந்திட வேண்டும்
வாழ்ந்தது போக
செத்திட வேண்டும்

இந்த வாழ்க்கை
ஒன்றே போதுமடி
எந்த ஜென்மத்திலும்
நீ தான்
என் வாழ்க்கையடி...

இது அப்பாவுக்காக


பொம்பளபுள்ள
பொரந்திருக்கு என
சொந்த பந்தம்
சங்கட்டப் பட
என் அழு குரலை
கேட்டு ஆனந்தப்பட்ட
ஒரு ஜீவன்
"அப்பா"

நான் எட்டி உதைத்ததையும்
கட்டி புரண்டதையும்
ஆனந்தமாய்
தாங்கிக் கொண்ட
நாயகன்....

எனக்கான நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
அவரது வாழ்க்கை..

என் பிறப்பு முதல்
நான்வயதுக்கு வந்த
பிறகும்
என்னை கட்டி
அனைத்து முத்தமிடும்
அன்பிற்குரியவன்
"அப்பா"

அப்பாக்களை நேசிக்கும்
மகள்களுக்கு
மட்டும் தெரியும்
முத்தம் காமத்தில்
சேராத காதலின்
பரிசு என்று.

அப்பாவை இழந்த மகளுக்கு
அப்பாவை காதலிக்கும்
மகளுக்கும்
மட்டும் தெரியும்
அப்பாவின் வாழ்க்கை
எனக்கானது என்று...

காதல் இனிக்கிறது

கண்ணுக்குள்ளே காதல்
வைத்து
நெஞ்சுக்குள்ளே உன்னை
வைத்தேன்
நீ வரும் நேரம் எல்லாம்
நெஞ்சம் இனிக்கிறதே!
இமைகள் மூட மறுக்கிறதே!

விழிகள்

காதலி: உன் இதயத்துடிப்பை
கேட்டுக்கொண்டே
என் இமை மூட வேண்டுமடா....

காதலன்: உன்னை என் இதயத்தில்
சுமந்து கொண்டே
என் விழிகள் மூட வேண்டுமடி...

மன்னித்துவிடு.....

என்னை மறந்து
மன்னிப்பதற்கு உன்னால்
முடியும் என்றால்
மன்னித்து விடு....
சாதி என்னும்
சவப்பெட்டியில் இருந்து
என்னால்
மீண்டு வரமுடியவில்லையடா?
நம் இதயம்
இருகப்பிணைத்த பிறகு
சாதி என்ன செய்யும்
என்று தோன்றியதடா
அன்று....
கால ஒட்டத்தில்
சவப்பெட்டியில் சிறையிட
பட்டேனடா?
திசை மாற்றப்பட்டோம்
நமக்கான
வாழ்க்கையோடு மறந்துவிடு
இல்லையேல்
மன்னித்துவிடு.....

இன்னும் எத்தனை காலம்

இன்னும் எத்தனை
காலம் காதலித்துக்கொண்டே
இருப்பது...

மறுஜென்மம் தேவையில்லை
எனக்கு
இந்த ஓரு ஜென்மம்
போதும்
உன்னுடன் வாழ்வதற்க்கு.....