கடிதங்கள்



உனக்காக எழுதிய
கடிதங்கள்
யாவும் உன் முகவரி
இல்லாததால்
என் மேல் சட்டை
பாக்கட்டில் பத்திரமாய்
உறங்குகிறது......

இம்சை


உன் நெத்தியோர சுருண்ட
முடி வெட்கப்பட்டு சினுங்க
நீ ஆசையோடு
கோதிவிட்ட அழக
பார்த்து நான் ரசிக்க
காதல் வந்து
செய்யும் இம்சை
தாங்கிக்கொள்ள முடியவில்லை
எப்போ நீ
பார்ப்பாய் என்று
இதயம் கூட துடிக்கவில்லை

நாயகி



என் பிறப்பின்
நாயகியே!
முகவிரி இன்றி
அலைகிறேன் உன்
இதயத்தை
உன்னிடம் கொண்டு
சேர்க.....

பெண்மை


நாம் கைகொர்த்து              
நடக்கும் ஒவ்வொரு முறையும்
என்
பெண்மையின் அந்தரங்கம்
வெற்றியடைகிறது.............

பதிவேடு



என்ன தவம் செய்ததோ 
உன் கைகுட்டை
நொடிக்கொருமுறை 
உன் முத்தத்தை
பதிவு செய்கிறது........