என் பெண்மை



எனக்கு சொந்தமானவனே
ஒரு முறை என்னை
கட்டியணைத்துவிட்டு செல்
உன் அரவணைப்பில் தான்
என் பெண்மை
கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறது ...

ரோஜா


இதோ இந்த ரோஜாவை போல
நானும் ஒரு நாள்
உன் கூந்தலை அலங்கரிக்க
காத்துக்கொண்டு இருப்பேன்
அன்று வரை இப்படி
வாடிக்கொண்டு இருப்பேன்

அரவணைப்பு




எப்படியடி உன்னால் மட்டும்
இப்படி சிரிக்க முடிகிறது.....

என் 26 ஆண்டு கால வாழ்க்கை
உன் புன்னகையில்
பாலாய்போகையில்
உன் அரவணைப்பு
என்னை வாழவைக்கிறது

மயிலிறகு





நோட்டு புத்தகத்தில்
மயிலிறகை ஒழித்துவைத்து
குட்டிபோடும் என்று
ஏங்கியது குழந்தை பருவம்....
இன்றும் ஏங்கிக் கொண்டு
இருக்கிறது மயிலிறகை தேடி?

செத்துப்பிழைக்கிறேன்



கண்ணீராய் என் காதல் கரையும்
போது நீ என் அருகில்
இருப்பதில்லை

எதற்காக என்னை
இப்படி அழவைக்கிறாய்

ஒவ்வொரு இரவும் என்னை
கொன்று புதைக்கிறாய்
நானும் செத்துப்பிழைக்கிறேன்..

தேவதை

தேவதையை தொலைத்துவிட்ட
ஏக்கத்தில் தொடங்கியது
எனது கவிதை............

பள்ளி பருவத்தில் என்னை
நேசித்த அவளை நிராகரித்திவிட்டேன்...

காதலை சுமந்து வந்தவளை
கண்ணீருடன் அனுப்பிவைத்தேன்..
எத்தனையோ தேடலுக்கு
பின்பு
அவளை கண்டுபிடித்தேன்...

அவள் சாதாரன பெண்
தான்
ஆனால் எனக்கு மட்டும்
கிராமத்து தேவதையாய்
குழந்தையின் சிரிப்பாய்
தாய் பாசத்தால்
என்னை ஏங்கவைத்தவள்....

அன்று காதலை மறுத்தவன்
இன்று ஏங்குகிறேன்....

நேசிக்கிறேன்
மனைவியாய் ஏற்றுக்கொள்ளாமல்
தொலைத்துவிட்ட தேவதையை
தாய்பாசத்தோடு நேசிக்கிறேன்..

தேவதையே!
உன் கணவன் அதிர்ஷ்டசாலியடி
தேவதையை
கைபிடிக்க போகும் யோகம்
எத்தனைபேருக்கு வரும்...

ஒப்படைத்துவிடுகிறேன்

முத்தத்தை மூலதனமாக
கொண்டவனே!!!!
உனக்காகவே என்
பெண்மையை நான்
பாதுகாத்தேன்..
முத்தத்தை முகவரியாக்கிக்
கொண்ட உனக்கு
என் பெண்மையை ஒப்படைத்துவிடுகிறேன்..............


இரவுகள்

எத்தனையோ இரவுகள்
தனிமையில் கழித்த
எனக்கு
உன் மடி சாய்ந்த
இரவுகள் மட்டும்
விடிய மறுக்கிறது...........