தாஜ்மஹால் அழகு

இந்தியாவின் வெள்ளை மாளிகை

அடுக்கடுக்கான பாதுகாப்பு
இல்லை
அடையாளம் தெரியாத ஆளே
இல்லை
அடைக்கிவைக்க ராஐா இல்லை
சுதந்திரமாய்
அடைக்கப்பட்டிருக்கிறது
ஒரு காவியம்.

மும்தாஜ் அழகா? காதல் அழகா?

தாஜ்மஹால் அழகு

தாரம் பலருண்டு
அதில்
மோகம் சிலருண்டு
ஆனால் காதலுக்கு அவளுண்டு

சலவை கல்லை கொண்டு
ஒரு சிற்பம் செய்து
அதில் ஒரு
சிலையை புதைத்துவிட்டான்.

புதைக்கப்பட்டவளை மீட்டேடுக்க
வந்த கூட்டமா?
இல்லை அடக்கம்
செய்யப்பட்டவளுக்கு அஞ்சலி
செலுத்த வந்த கூட்டமா?

காவியத்தை கண்டு
காதலை ரசிக்கும் போது
ரகசியமாய் ஒரு
கதறல் கேட்டது.

"கூச்சலிடாமல் என்
நினைவுச்சின்னத்தை
ரசியுங்கள்
அவள் நிம்மதியாக
உறங்கட்டும்".

ஏசி அறையில் மல்லிகை வாசனை

தடை விதிக்கப்பட்ட பகுதி

காற்றுக்கு தடை
கதிரவனுக்கு தடை
வெளிஉலகுக்கு தடை

கதிரவன்  சுட்டெரிக்கிறானா இல்லை
மழை கொட்டி தீர்க்கிறதா?
என்று தெரியாமல்
அடைக்கப்பட்ட ஒரு அறை

எங்கோ பனிமலையில்
ஜஸ்கட்டியின் மீது
உட்கார்ந்து இருப்பது போல
அறைமுழுக்க குளிர் சாதன பெட்டியிம்
வசம்

வியர்வைக்கு கட்டுப்பாடு
விதிக்கப்பட்ட
அந்த அறைக்கு மட்டும்
எப்போதும் குளிர் காலம்.

எங்கோ மல்லிகையின்
வாசம் அந்த அறையில்

கன்னியின் கூந்தலில் இர்ருந்தோ
இல்லை
தாலிக்கொடி சூடிய மலர்கொடியாள்
கூந்தலில் இருந்தோ?
அந்த அறையை நிரப்பியது..

மயங்க வைக்கும் குளோரோபார்ம்
மருந்து மல்லிகை
சுவசத்திற்கு தடைவிதித்து
மூலைக்கு கிறுக்கு பிடிக்கவைக்கும்
வாசனை

உணர்சிகளை தூண்டிவிட்டு
மூலையின் செயல்பாட்டை
நிறுத்திவைக்கும் மல்லிகை

அதனால் தான் மங்கையருக்கு
மல்லிகை மேல்
தீராத காதலா?
 

@ இரவல் புன்னகை

ஒரே ஒரு புன்னகையை கடனாக
கொடுத்துவிட்டு செல்லுங்கள்
என்னை ஏலனமாய் பேசுபவர்களை
கண்டு ஆனந்தமாய் சிரிக்க

திருவிழா

சாமி புறப்பட்டு
ஊர்வலம் செல்கிறது
என்னுடைய தேவதை
பட்டுத்தாவணியில்
வழிநடத்தி செல்ல........

சண்டை

அடிக்கடி சண்டையிடும்
நமக்கு தான் தெரியும்
இது காதலின்
அந்தரங்க நேரம் என்று

கண்ணாடி

என்னை முதல் முதலாய்
வெட்கப்பட வைத்தவன்
நீ
அதனால் தான்
என்னவோ
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி கூட
என்னை வெட்கப்பட வைக்கிறது.....

குழந்தை

உன்னை தாயாக
பார்க்க தவறிய
நேரங்களில்
உன்னை என்
குழந்தையாய் பார்க்கிறேனடி......

வாழ்த்துகிறேன்

இதோ வந்துவிட்டேனடி
உன் திருமணத்திற்கு...

எனக்கு அழைப்பில்லை
உன்னை அதிகம்
நேசித்த நான் மட்டுமே
வாழ்த்தமுடியும்

தோற்றுவிட்டோமோ?
தோற்கடிக்கபட்டோமோ?
என்னை மறந்துவிட்டாய்

அழுகை வறத்தான் செய்கிறது
கடைசியாக ஒருமுறை
அழுதுவிட்டுத்தான் போகிறேனே
உனக்காக
என் காதலுக்காக

தேவதையடி நீ
மணக்கோலத்தில்

என்னை பார்த்திருப்பாய்
என்று நினைக்கிறேன்....
உன்னுடைய கடைசி
நினைவுகள் என்னுல்
எரிந்துகொண்டு இருக்கிறது.

உன்னை பார்க்க வேண்டும்
என்ற ஆசை
நிறைவேறிவிட்டது.
நீ எப்போதும்
புன்னகையுடன் வாழ
வாழ்த்துகிறேன்...

உனக்கும் எனக்கும்

பட்டமரம் அது பூக்கிறது
உனக்காக
பூக்கள் தந்து அது சிரிக்கிறது
எனக்காக

நீ பார்க்கிறாய்
நான் சிரிக்கிறேன்

உன்னை தொட்டுச்செல்லும்
தென்றலும் கூசும்
நீ விட்டுச்செல்லும் வாசமும் வீசும்
கண்கள் சுலலுதே
நீ சுலற்றினாய்
என் நிம்மதியை நீ
எடுத்துச்சென்றாய்

காதலி

மறக்காமல் ஒரு
முத்தம்
தந்து விடு
என் கவிதைக்கு
ஒரு
காதலி தேவைப்படுகிறாள்

கற்பனை

நான் அதிகம்
கற்பனை செய்பவனடி
அதனால் தான்
நீ என்னை
காதலிப்பதாய்
கற்பனையில் வாழ்கிறேன்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

மண் பொன் பெண்
ஆசை யில்லா மானுடனை
சுதந்திர இந்தியாவில்
காண யேங்கும்
கோடிக்கணக்கான  இந்தியனில்
நானும் ஒருவன்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அழகு



இப்படி ஒரு அழகை
ஆட்கொள்ள தானடி
நான் இத்தனை வருடம்
கண் இமைக்காமல் காத்திருந்தேன்.

கோபம்



எப்படியும் கடைசியில் என்னை
கட்டிப்பிடிக்கதான் போகிறாய்
அப்புறம் எதற்க்கு 
உன் செல்ல கோபத்தை தூதாக
அனுப்புகிறாய்

என்றும்


கட்டிப்பிடித்தால் காதல்
அதிகரிக்குமாம்

எங்கே என்னை
விட்டுக்கொடுக்காமல் கட்டிக்கொண்டு
இரு பார்க்கலாம்.....

சாபம்


எப்போதும் உன்னை கட்டிப்பிடித்துக்கொண்டு
இருக்கவே என்
விரல்கள் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.

தீராத சாபத்தை கொடுத்துவிட்டாய்
ஓயாமல் கட்டிப்பிடிக்கிறேன்.

முடியவில்லையடா

முடியவில்லையடா
உன்னை மறப்பதற்கு
எவ்வளவோ போராடிவிட்டேன்
முடியவில்லை....
சொந்தத்தை உதரிவிட்டேன்
உன்னை சொந்தமாக்கிக்கொள்ள
புரப்பட்டுவிட்டேன்
உன் வாழ்க்கையில்
என்னை புதைப்பதற்கு...

கட்டுப்பட்டுவிட்டேன்


ஆசைக்கு ஒரு பெண்
என்று என்னை
அன்பாய் வளர்த்தார்கள்

என் சிரிப்பை கண்டு
சிலிர்த்தார்கள்
என் அழுகை கண்டு
கலங்கினார்கள்
என்னை சீவி சிங்காரித்து
என் அழகை ரசித்தார்கள்

நான் வயதுக்கு வந்ததும்
சந்தோஷத்தில் மிதந்தார்கள்

பொறுப்புகள் கூடியது

அளவுடன் சிரிக்க கற்றுக்கொண்டேன்
அளவுடன் பேச கற்றுக்கொண்டேன்
வெட்கப்பட வேண்டும்

பருவ வயது கொஞ்சம்
மோசம் தான்
கட்டுப்பாட்டுடன் வளர்ந்தேன்

திருமணம் முடிவானது

அறிமுகம் இல்லாத
ஒருவருடன் என்
மீதி வாழ்க்கையை ஒப்படைக்க
இசைந்துவிட்டேன்


என் அப்பாவிற்கு பிறகு
என்னை அதிகம் நேசிப்பவர்
என்னை எப்போதும் காதலிப்பவர்
அடிக்கடி என்னை கட்டிப்பிடிப்பவர்
இப்படி
எத்தனையோ ஆசைகளுடன்
கட்டுப்பட்டுவிட்டேன்

மனைவியாய் என் வாழ்க்கையை
ஒப்படைத்துவிட்டேன்......

முத்தம்


நீ முத்தம் தரும்போலுது
என் முகங்கள்
சிவக்கிறது

உன் முத்த நாடகத்தில்
நான் மொத்தம் கரைகின்றேன்

-சுதாகர் ராமகிருஷ்ணன்

புகைப்படம்:http://www.facebook.com/vijayeesam

பூக்கள்



உன் புன்னகைக்காகவே
இந்த பூக்களை
சாகடிக்கிறேன்