சில்மிஷம்

உன் சில்மிஷத்தை தொடங்கிவிட்டாய்
போல் இருக்கிறது
என் கால் கொழுசு
ஊமையாகி விட்டது......

கோபுர விளக்கு-2011ஆம் ஆண் டு எழுத்து.காம் இணையதளம் நடத்திய மாபெரும் கவிதை போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட கவிதை.

சூரியன் மங்கிவிட்டது
நிழவு உதித்துவிட்டது
இருலில் முழ்கிவிட்டது பூமி
"மின்சார தட்டுப்பாடு"

குளிர் காற்று என்னை கடந்துசெல்ல
தூங்கிக் கொண்டு
இருந்த
என்னை தட்டி எழுப்பியது
சாறல் காற்று....

என்னருகே மழைநீர்
சொட்டிக் கொண்டு
இருந்தது!
என்னை சுற்றி எங்கும்
இருட்டு
எட்டிப் பார்த்தேன்
ஊருக்கு மத்தியில் உச்சி கோபுரத்தில்
ஒரு மின்விளக்கு
எரிந்துகொண்டு இருந்தது...

ஒத்தையா நின்னு ஊருக்கே
வழி காட்டியது...
".......ஊருக்கே பெரியமனுசன் நான் தான்"
"........நான் இருக்கிறேன் நீங்கள் செல்லுங்கள்"
"........நானே கடவுள் நானே முதல்வன்"
"........ஒத்த விளக்கு ஒன்னு கோபுரத்தில்
இருக்கு எல்லோரும் பாத்துக்குங்கோ"
என்று சொன்னதோ!
அது கோபுரத்திற்கும் அதில்
வாழும் சிற்பங்களுக்கும்
உண்டான ரகசியம்.................

சண்டை

எனக்கும் என் படுக்கையறை
தலையணைக்கும்
சண்டை!
இப்போதெல்லாம் அதை
கட்டிப்பிடித்து உறங்க
மறுத்துவிடுகிறேன்....................

உனக்கான இடம்

மாரடைப்பு வருவதற்கான
அறிகுறி
என் இதயத்தியில்
வெற்றிடத்தை நிறப்ப
உதிரமும் மறுக்கிறது.........
இது உனக்கான இடம்

அழகன்

நானும் உனக்கு
ஏற்றவன்
தான்....
என் கவிதையை
உன் மார்போடு
கட்டியனைத்து
தூங்கிய போது.........