குல சாமி


ஊரில் உள்ள
சாமி போதாதுனு
நாம நட்டு
வச்சோமே
ஒரு கல்லு
இப்ப
அதுதான்டா
என் குலசாமி.........................





காணவில்லை

காணவில்லை என்
கற்பனையை!
மழை சாரலுக்கு மத்தியில்
காணாமல் போன
வானவில்லில் எழுதிய
என் கவிதை போல!

தாண்டவம்

ஆயிரம் கால் மண்டபத்தில்
நீ நடந்து
செல்ல பார்த்தேன்
அப்பா!!!!!
அந்த நடராஜன் கூட
தன் தாண்டவத்தை
முடித்துக் கொண்டான்
நீ
கால் பதித்த
மறுகணமே!

கண்ணாமூச்சி

சூரியன் வரும்
போது
நிலவு இல்லை
நிலவு வரும்
போது
சூரியன் இல்லை
இவர்களிடம் இருந்து
தான்
கற்றுக்கொண்டார்களோ
கண்ணாமூச்சி
ஆட்டத்தை.............

கேள்வி-பதில்

நான் விழியசைவில்
கேட்ட கேள்விக்கு
ஒரு புன்னகையில்
பதில் கூறிவிட்டு
மறைந்துவிட்டாள்
அவள்
வரும் வரை
என்றும் எப்போதும்
என் காதலின்
காலடியில்....