தாஜ்மஹால் அழகு

இந்தியாவின் வெள்ளை மாளிகை

அடுக்கடுக்கான பாதுகாப்பு
இல்லை
அடையாளம் தெரியாத ஆளே
இல்லை
அடைக்கிவைக்க ராஐா இல்லை
சுதந்திரமாய்
அடைக்கப்பட்டிருக்கிறது
ஒரு காவியம்.

மும்தாஜ் அழகா? காதல் அழகா?

தாஜ்மஹால் அழகு

தாரம் பலருண்டு
அதில்
மோகம் சிலருண்டு
ஆனால் காதலுக்கு அவளுண்டு

சலவை கல்லை கொண்டு
ஒரு சிற்பம் செய்து
அதில் ஒரு
சிலையை புதைத்துவிட்டான்.

புதைக்கப்பட்டவளை மீட்டேடுக்க
வந்த கூட்டமா?
இல்லை அடக்கம்
செய்யப்பட்டவளுக்கு அஞ்சலி
செலுத்த வந்த கூட்டமா?

காவியத்தை கண்டு
காதலை ரசிக்கும் போது
ரகசியமாய் ஒரு
கதறல் கேட்டது.

"கூச்சலிடாமல் என்
நினைவுச்சின்னத்தை
ரசியுங்கள்
அவள் நிம்மதியாக
உறங்கட்டும்".

ஏசி அறையில் மல்லிகை வாசனை

தடை விதிக்கப்பட்ட பகுதி

காற்றுக்கு தடை
கதிரவனுக்கு தடை
வெளிஉலகுக்கு தடை

கதிரவன்  சுட்டெரிக்கிறானா இல்லை
மழை கொட்டி தீர்க்கிறதா?
என்று தெரியாமல்
அடைக்கப்பட்ட ஒரு அறை

எங்கோ பனிமலையில்
ஜஸ்கட்டியின் மீது
உட்கார்ந்து இருப்பது போல
அறைமுழுக்க குளிர் சாதன பெட்டியிம்
வசம்

வியர்வைக்கு கட்டுப்பாடு
விதிக்கப்பட்ட
அந்த அறைக்கு மட்டும்
எப்போதும் குளிர் காலம்.

எங்கோ மல்லிகையின்
வாசம் அந்த அறையில்

கன்னியின் கூந்தலில் இர்ருந்தோ
இல்லை
தாலிக்கொடி சூடிய மலர்கொடியாள்
கூந்தலில் இருந்தோ?
அந்த அறையை நிரப்பியது..

மயங்க வைக்கும் குளோரோபார்ம்
மருந்து மல்லிகை
சுவசத்திற்கு தடைவிதித்து
மூலைக்கு கிறுக்கு பிடிக்கவைக்கும்
வாசனை

உணர்சிகளை தூண்டிவிட்டு
மூலையின் செயல்பாட்டை
நிறுத்திவைக்கும் மல்லிகை

அதனால் தான் மங்கையருக்கு
மல்லிகை மேல்
தீராத காதலா?
 

@ இரவல் புன்னகை

ஒரே ஒரு புன்னகையை கடனாக
கொடுத்துவிட்டு செல்லுங்கள்
என்னை ஏலனமாய் பேசுபவர்களை
கண்டு ஆனந்தமாய் சிரிக்க

திருவிழா

சாமி புறப்பட்டு
ஊர்வலம் செல்கிறது
என்னுடைய தேவதை
பட்டுத்தாவணியில்
வழிநடத்தி செல்ல........

சண்டை

அடிக்கடி சண்டையிடும்
நமக்கு தான் தெரியும்
இது காதலின்
அந்தரங்க நேரம் என்று