நம்பிக்கையுடன் போகிறேன்

ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் 
உன்னை சந்திக்கிறேன்..
இப்பொது எனக்கு வைரமுத்துவின் 
"மௌன பூகம்பம்" நினைவிற்கு வருகிறது..
ஓராண்டு, நம் இருவருக்கும் 
பேரிய வித்தியாசம் இல்லை. 
உடல் வேறுபாட்டை தவிற.
அதே சிரிப்பு
அதே சினுங்கல்
அதே வெட்கம்
என்ன கழுத்தை சுற்றி ஒரு
மஞ்சள் கயிறு...
பிள்ளை வரம் பெற்றுவிட்டாய்
அவனோ(அ)அவளோ உனக்கு ஈடான அழகு தான்...
நீ சந்தோஷமாய் இருக்கிறாய்
என்ற நம்பிக்கையுடன் போகிறேன்,
உன் காதலில் கருகியவனாய்.

ஆனந்தக் கூச்சல்


பலமுறை நான்
தடுத்தும்
உன்னை கடக்கும்போதெல்லாம்
என் கைவளையலும்
கால் கொழுசும்
ஆனந்தக் கூச்சலிடுகின்றன....

♥♥காதல்♥♥


♥பாலாய் போன காதல்
என்னை பாடாய்படுத்துகிறது....
மறக்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
இந்த காதலை♥

தொட்டாச் சினுங்கி




பட்டுச்சேலை வாங்கச்
சொல்லி
என் நெஞ்சு மீது
தலைசாய்த்து
தொட்டாச் சினுங்கி
போல
சினுங்குகிறாய்...


தகுதிச்சுற்று


தகுதிச்சுற்றில் தோற்றுவிட்டேன்
என்பதனாலா
என்னை உன் காதல்
பரிச்சையில் நிராகரித்துவிட்டாய்....

காதல் மேடை


ரகசியமாய் பல
அந்தரங்கம் அரங்கேற்றப்பட்ட
காதல் மேடை இது...
இதில் நானும்
கால் பதித்து கடந்துசென்றதிலும்
காரணம் தெரியாமல்
தோற்றதிலும் மகிழ்ச்சி
அடைகிறேன்........

கடிதங்கள்



உனக்காக எழுதிய
கடிதங்கள்
யாவும் உன் முகவரி
இல்லாததால்
என் மேல் சட்டை
பாக்கட்டில் பத்திரமாய்
உறங்குகிறது......

இம்சை


உன் நெத்தியோர சுருண்ட
முடி வெட்கப்பட்டு சினுங்க
நீ ஆசையோடு
கோதிவிட்ட அழக
பார்த்து நான் ரசிக்க
காதல் வந்து
செய்யும் இம்சை
தாங்கிக்கொள்ள முடியவில்லை
எப்போ நீ
பார்ப்பாய் என்று
இதயம் கூட துடிக்கவில்லை

நாயகி



என் பிறப்பின்
நாயகியே!
முகவிரி இன்றி
அலைகிறேன் உன்
இதயத்தை
உன்னிடம் கொண்டு
சேர்க.....

பெண்மை


நாம் கைகொர்த்து              
நடக்கும் ஒவ்வொரு முறையும்
என்
பெண்மையின் அந்தரங்கம்
வெற்றியடைகிறது.............

பதிவேடு



என்ன தவம் செய்ததோ 
உன் கைகுட்டை
நொடிக்கொருமுறை 
உன் முத்தத்தை
பதிவு செய்கிறது........

மாமியார்... மருமகள்...


மஞ்சள் பூசின முகம் ஏங்கே?
வாடாத பூ ஏங்கே?
அழியாத சிரிப்பு ஏங்கே?
ஓயாத பேச்சு ஏங்கே?
எல்லாம் மற்ந்துடுச்சு
எங்கோ போய்ருச்சு
நான் மறுவீடு போனபோது

மாமியார் முகம் சுழிக்க
நாத்தனார் முனுமுனுக்க
மாமனார் கடுகடுக்க
கொளுந்தனார் கொந்தலிக்க
கணவன் தலையசைக்க
நான் உள்ளே கதவடைக்க

மாதங்கள் ஒடிடுச்சு
மலடி பட்டம் நீங்கிடுச்சு
பிள்ளையும் பெத்தாச்சு
ஊமையாய்
செல்கிறது வாழ்க்கை

ஆண்டிகள் முன்னேற
நானும் மாமியார் ஆக
எனக்கும் மருமகள் வர
வந்தவள் அம்மா என்றலைக்க
பொங்கிவந்த கண்ணீர அடக்கி
அவள நெஞ்சோட அனச்சுகிட்டேன்.



தோழி காதலி




பார்வை போன பிறகு என் வாழ்கைக்கு
துணையாக வந்தவள் தோழி!
ஒளியாக வந்தவள் காதலி!

ஆயிரம் முத்தங்கள்

முத்தப் பட்டியலில்
முதல் இடத்தை
பெற்றுவிட்டோம்!
பின்பு இருக்காதா
ஆயிரம் முத்தங்களை
தாண்டி அல்லவா
சென்றுகொண்டிருக்கிறது....



அந்தரங்க காவ(த)லன்


அவள் அந்தரங்க
காவ(த)லனாய் நானிருக்க
அத்து மீறி
அவள் மேனியை
தீண்டிய மழைக்கு
அனுமதி மறுக்கப்படிகிறது....



சாரல்



குறும்புத்தனமாக நீ 
செய்யும் தவறுக்கு 
உதட்டை கடிக்கும்
ஒவ்வொரு முறையும்
என் இதயத்தின்
ஏதோ ஒருமூலையில்
சாரல் அடிக்கிறது.

மின்னல்



காதலை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
என் சிந்தனையில்
உன் கண்சிமிட்டல்கள்
மின்னல் வெட்டுகளாய்!!!!!!!!!!!!!

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்

இன்று என் கவிதையின் 
பிறந்தநாள் 
என் பேனா முனையில்
பிறந்தநாள் கொண்டாடுகிறாள்
என் கவி"அரசி"


பயணம்


கொடியில் பூத்த
மல்லிகையை விட
உன் கூந்தலில் குடியேறிய
மல்லிகையின்
வாசம் பட்டு என்
பயணம் தடைபட்டது...

தொடங்கிவிட்டேன்
மறுபடியும்!
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த மல்லிகையின்
வாசனையுடன்....

ஆறுதல்

அழகாய் சிரித்துவிட்டாய்
மெதுவாய் பார்த்துவிட்டேன்
படபடக்கும் என் இதயத்திற்கு
ஆறுதலாய் சில
முத்தங்கள்!


அரங்கேற்றம்



உன் வெட்கத்திலும்
என் சினுங்கலிலும்
அரங்கேற்றப்பட்டது
நம் முதல் முத்தம்!

பிடித்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இயற்கை பிடித்திருக்கிறது
அதில் செயற்கை பிடிக்கவில்லை!
நிலவு பிடித்திருக்கிறது
அதன் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவில்லை!
நட்சத்திரம் பிடித்திருக்கிறது
அதன் தூறம் பிடிக்கவில்லை!
மழை பிடித்திருக்கிறது
அதில் நனைய பிடிக்கவில்லை!
காதல் பிடித்திருக்கிறது
அதன் லீலை பிடிக்கவில்லை!
நட்பு பிடித்திருக்கிறது
அதன் தெளரகம் பிடிக்கவில்லை!

தனிமை பிடித்திருக்கிறது!
அதில் கனவு பிடித்திருக்கிறது!
கனவில் கற்பனை பிடித்திருக்கிறது
அதில் காதல் பிடித்திருக்கிறது!
காதலில் என்னை பிடித்திருக்கிறது!!!!!!

நவயுக தேவிகள்



இது தேவிகள் நடத்தும்
புரட்சி
எனக்கு சம்பந்தமில்லை

அடைபட்டு கிடந்தவள்
விடுதலை
பெற்றுவிட்டாள்

மர்மமான முறையில்
ஒர் புரட்சி!

வீணையை ஏந்தியவல்
இன்று ஆயுதம் ஏந்துகிறள்!
தாமரையி அமர்ந்தவள்
இன்று விண்வெளியில்
பறக்கிறாள்!
பொற்காசுகலை கொடுத்தவள்
இன்று ரூபாய் நோட்டுகலில்
புரலுகிறாள்!

என்ன ஒரு வறுத்தம்
இத் தேவிகள்
இன்னும் ஊமைகளாகவே
நடமாடுகின்றனர்.



காதல் பொண்ணு


காதலுக்கு கண்ணில்லனு
கேள்விபட்டேன்
அது
நா காதலிச்ச பொண்ணு
தானு தெரிஞ்சுகிட்டேன்...

அழகில்லாத பொறப்புனு
வருத்தப்பட்டேன்
அவ அழகோட என்ன
அல்ல ஆசபட்டேன்!


போக்குவரத்து நெறிசல்


காலையும் மாலையும்
போக்குவரத்து நெறிசல்
கொஞ்சம்
அதிகம் தான்..
இருக்காதா
சாலையை கடந்து
செல்பவள்
நீ அல்லவா!

தடையங்கல்


ஒவ்வொரு முறையும்
என் வீட்டு
கண்ணாடியில் முகம்
பார்க்கும்போது என்
கண்ணத்தில் நீ
கொடுத்த முத்தத்தின்
தடையங்கல் மட்டுமே
தெரிகின்றது.

குல சாமி


ஊரில் உள்ள
சாமி போதாதுனு
நாம நட்டு
வச்சோமே
ஒரு கல்லு
இப்ப
அதுதான்டா
என் குலசாமி.........................





காணவில்லை

காணவில்லை என்
கற்பனையை!
மழை சாரலுக்கு மத்தியில்
காணாமல் போன
வானவில்லில் எழுதிய
என் கவிதை போல!

தாண்டவம்

ஆயிரம் கால் மண்டபத்தில்
நீ நடந்து
செல்ல பார்த்தேன்
அப்பா!!!!!
அந்த நடராஜன் கூட
தன் தாண்டவத்தை
முடித்துக் கொண்டான்
நீ
கால் பதித்த
மறுகணமே!

கண்ணாமூச்சி

சூரியன் வரும்
போது
நிலவு இல்லை
நிலவு வரும்
போது
சூரியன் இல்லை
இவர்களிடம் இருந்து
தான்
கற்றுக்கொண்டார்களோ
கண்ணாமூச்சி
ஆட்டத்தை.............

கேள்வி-பதில்

நான் விழியசைவில்
கேட்ட கேள்விக்கு
ஒரு புன்னகையில்
பதில் கூறிவிட்டு
மறைந்துவிட்டாள்
அவள்
வரும் வரை
என்றும் எப்போதும்
என் காதலின்
காலடியில்....

உங்களுக்கும் பிடிக்கும்

இடம்மாறி துடிக்கும் இதயத்தின்
இடைவெளி இல்லா உச்சரிப்பு
காதல்!


தனிமையில் சிரித்து பாருங்கள்,
கைகோர்த்து நடந்து பாருங்கள்,
இருவரும் விரல்விட்டு நட்சத்திரங்களை
எண்ணிப்பருங்கள்,
காதலின் இதயத்துடிப்பை கேட்டுப்பாருங்கள்,
தோல்மீது சாயுங்கள்,
மடிமீது தவழுங்கள்,
"காமம்" காதலின் ஏற்ப்பாடு
கொஞ்சம் அரங்கேற்றுங்கள்,
உங்கள் நிழல்கலை கட்டி அனைக்க
விடுங்கள்,
முத்தத்தில் முதுற்ச்சி அடையுங்கள்,
ஒரே போர்வைக்குள் உங்களை
சிறை படுத்துங்கள்,
காதோரம் ரகசியம் பேசுங்கள்,
இதழோரம் இசை பாடுங்கள்,
"கொழுசு" காதலின் சிணுங்கல்
கொஞ்சம் இசைத்துப்பாருங்கள்,

இவை அனைத்தையும் கற்ப்பனை
செய்து பாருங்கள்
"காதல்" உங்களுக்கும் பிடிக்கும்.

அந்த நாள்...

என் கருவிழிகள் இரண்டும்
இருண்டு கிடக்கிறது......
உன் கருவறையில்
நான் வசித்த அந்த
நாட்களை போல!!!!!

பாசத்துடன் நான்...



அன்பான அம்மாவிற்கு....
***********************************
உயிருக்குள் உயிர்
சுமந்தது ஒரு உயிர்
***********************************
நான் வசித்த முதல் வீடு
உன் கருவறை
பத்துமாதம் சேதிக்கினாய்
உன் கருவறையில்
***********************************
நீ மறுபிறவி எடுத்து எனக்கு
முதற்பிறவி தந்தாய்
உன்னை அழவைத்தேன் எனக்கு
முத்த மழை பொழிந்தாய்
***********************************
கைபிடித்து கூட்டிச்சென்றாய்
நிலவை காட்டி சோறுட்டினாய்
***********************************
என் கருவிழிகள் இரண்டும்
இருண்டு கிடக்கிறது
உன் கருவறையில்
நான் வசித்த அந்த
நாட்களை போல
***********************************
மீண்டும் மீண்டும்
உன் மகனாக பிறக்க
ஆசை...
தாயே!
உன் கருவறை
கிடைக்குமென்றால்......

தமிழர் திருநாள்!

"தை பிறந்தாள் வழி பிறக்கும்"

முப்பெரும் விழாவாம்
தை பொங்கல்,
உழவனோடு ஒன்றிய நண்பனுக்கு
கானும் பொங்கல்,
மாருதட்டிய உழவனுக்கு
உழவர் திருநாள்.

நம்மை அடையாளம் காட்டிய
தமிழர் திருநாள் இது!

ஆதிநாயகனாம் கதிரவனுக்கு
வணக்கம் சொல்லி,
பச்சருசி மாவில் கோலம் போட்டு,
மண்பனையில் பொங்கல்
வைத்து,
செங்கரும்பை நிருத்தி
கொண்டடுவோம்.

குழப்பங்களுக்கு இடையே
நம் தமிழ் புத்தாண்டு.....
வாழ்த்துக்கள்????
அனைவருடைய நெஞ்சங்களிலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்.

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

சில்மிஷம்

உன் சில்மிஷத்தை தொடங்கிவிட்டாய்
போல் இருக்கிறது
என் கால் கொழுசு
ஊமையாகி விட்டது......

கோபுர விளக்கு-2011ஆம் ஆண் டு எழுத்து.காம் இணையதளம் நடத்திய மாபெரும் கவிதை போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட கவிதை.

சூரியன் மங்கிவிட்டது
நிழவு உதித்துவிட்டது
இருலில் முழ்கிவிட்டது பூமி
"மின்சார தட்டுப்பாடு"

குளிர் காற்று என்னை கடந்துசெல்ல
தூங்கிக் கொண்டு
இருந்த
என்னை தட்டி எழுப்பியது
சாறல் காற்று....

என்னருகே மழைநீர்
சொட்டிக் கொண்டு
இருந்தது!
என்னை சுற்றி எங்கும்
இருட்டு
எட்டிப் பார்த்தேன்
ஊருக்கு மத்தியில் உச்சி கோபுரத்தில்
ஒரு மின்விளக்கு
எரிந்துகொண்டு இருந்தது...

ஒத்தையா நின்னு ஊருக்கே
வழி காட்டியது...
".......ஊருக்கே பெரியமனுசன் நான் தான்"
"........நான் இருக்கிறேன் நீங்கள் செல்லுங்கள்"
"........நானே கடவுள் நானே முதல்வன்"
"........ஒத்த விளக்கு ஒன்னு கோபுரத்தில்
இருக்கு எல்லோரும் பாத்துக்குங்கோ"
என்று சொன்னதோ!
அது கோபுரத்திற்கும் அதில்
வாழும் சிற்பங்களுக்கும்
உண்டான ரகசியம்.................